உத்தரகாண்ட் சுரங்க தொழிலாளர்களை மீட்க உதவிய திருச்செங்கோடு பொறியாளர்களுக்கு பாராட்டு விழா

உத்தரகாண்ட் சுரங்க தொழிலாளர்களை மீட்க உதவிய, திருச்செங்கோடு பொறியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
உத்தரகாண்டில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் மண் சரிந்ததால் சுரங்கத்தினுள் மாட்டிக்கொண்டனர் இவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று இருந்த நிலையில் திருச்செங்கோடு ரிக் தொழில்நுட்பம் அந்த தொழிலாளர்களுக்கு உணவு தண்ணீர் ஆக்சிஜன் மருந்து பொருட்கள் உள்ளிட்ட பல உதவிகளை கொடுக்க திருச்செங்கோடு தரணி ஜியோ டெக் நிறுவனம் அமைத்துக் கொடுத்த ஆறு இன்ச் போர்வெல் குழாய் முக்கியத்துவம் பெற்றது இந்த குழாய் அமைக்கப்பட்டதால் 41 பேருக்கும் உணவு தண்ணீர் காற்று மருந்து பொருட்கள் தொலைதொடர்பு சாதனங்கள் என்று அனுப்பி அவர்களை அவர்கள் குடும்பத்தாருடன் பேச வைத்தனர்.
இதற்கு மிகவும் உதவியாக இருந்த தரணி ஜியோ டெக் நிறுவனத்தையும், PRD GT 5 என்ற இயந்திரத்தை தயாரித்துக் கொடுத்த பி ஆர் டி நிறுவனத்திற்கும் திருச்செங்கோடு சிட்டி சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பாக மீட்பு பணியில் ஈடுபட்ட பொறியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். மூத்த பொறியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்ட பொறியாளர்களுக்கு வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தனர் எவ்வாறு மீட்பு பணியில் ஈடுபட்டோம் என தரணி ஜியோடெக் இயக்குனர் ஜெயவேல் எடுத்து கூறினார்.
பி ஆர் டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் பேசும்போது மீடியா பவர் என்ன என்பது எங்களுக்கு இந்த மீட்பு சம்பவத்தில் தெரிய வந்தது என்று கூறினார் பொறியாளர் ஜெயவேல் பொறியாளர் பூபதி பொறியாளர் பரந்தாமன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது, இதுகுறித்து சங்கத்தின் தலைவர் சரவணன் கூறும் போது உத்தரகாண்ட் சுரங்கத்தில் மாட்டிக் கொண்ட 41 தொழிலாளர்களை உயிரோடு மீட்க திருச்செங்கோடு பொறியாளர்கள் உதவி பெருமளவு தேவைப்பட்டுள்ளது அவர்களை பாராட்டு மகிழ்கிறோம் அவர்கள் செய்த சாதனையால் எங்கள் சங்கம் பெருமை அடைகிறது என்று கூறினார்.
இந்த பாராட்டு விழா நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரெர்ஷ்பாபு,திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சங்கத்தின் உயர்மட்ட குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், நாச்சிமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் ராஜா,கண்ணன் சங்கத்தின் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
