திருச்செங்கோடு நகராட்சி வளர்ச்சி திட்டப் பணிகள் - எம் எல் ஏ மற்றும் நகர மன்ற தலைவர் துவக்கி வைத்தனா்

திருச்செங்கோடு நகராட்சி வளர்ச்சி திட்டப் பணிகள் - எம் எல் ஏ மற்றும் நகர மன்ற தலைவர் துவக்கி வைத்தனா்
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர்தொகுதி மேம்பாட்டு நிதியில் நகராட்சி வார்டு எண் 30 கொல்லப்பட்டி அருந்ததியர் தெருவில் 151 மீட்டர் நீளம் 4 மீட்டர் அகலம் உள்ள கான்கிரீட் சாலை, வார்டுஎண் 32 பெரியார் நகர்பகுதியில் ரூ 7 லட்சம மதிப்பில் 178 மீட்டர் நீளம் 3.20 மீட்டர் அகலம் மழை நீர் வடிகாலுடன் கூடிய காங்கிரீட் சாலை, அமைத்தல் என ஒரு 15 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலும், திருச்செங்கோடு நகராட்சி வார்டு எண் 24 டி சி எம் எஸ் அருகில்ரூ ஒன்பது லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் 125 மீட்டர் நீளம் உள்ள மழை நீர் வடிகால்அமைத்தல், வார்டு எண் 27 டி சி எம் எஸ் பின்புறம் ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் 25 மீட்டர் நீளமுள்ள மழை நீர் வடிகால் அமைத்தல் வார்டு எண் 1 சீதாராம் பகுதியில்ரூ 7 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் 193 மீட்டர் நீளமுள்ள மழை நீர் வடிகால் அமைக்கும் பணி,மற்றும் வார்டு எண் 15 நாகர்பள்ளம் பகுதியில்ரூ 16 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டிடம் அமைத்தல் என 56 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன்,நகராட்சி ஆணையாளர் சேகர்,பொறியாளர் சரவணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், மாவட்டத் தலைவர் சேன்யோ குமார்,மற்றும் பகுதி நகர் மன்ற உறுப்பினர்கள்,அசோக் குமார்,செல்லம்மாள் தேவராசன் நகர மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி செல்வி ராஜவேல் எனபலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story