திருச்செங்கோடு, விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் நான் முதல்வன் கல்லூரி கனவு -2024 நிகழ்வு !

திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் நாமக்கல் மாவட்ட திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் கல்லூரி கனவு -2024 நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலாளர் முனைவர் மு.கருணாநிதி அவர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்வினைத் தொடங்கிவைத்து தலைமை தாங்கினார்.

விவேகானந்தா கல்விநிறுவனங்களின் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் குப்புசாமி அவர்கள், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாகி திரு சொக்கலிங்கம், திறன் மேம்பாட்டு துறை இயக்குநர் முனைவர் குமரவேல் அவர்களும்,ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் பாலகுருநாதன், அட்மிஷன் இயக்குநர் சவுண்டப்பன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ப.விஜயன் அவர்கள்வரவேற்புரை வழங்கினார். போட்டித் தேர்வுகளின் அவசியம் குறித்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி உரையாற்றினார்.

உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் இமயவரம்பன் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களுக்கு விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் துணை தாளாளர் முனைவர் கிருபாநிதி கருணாநிதி பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் பேபிஷகிலா சிறப்புரையாற்றினார். பொறியியல் துறை மற்றும் அது சார்ந்த படிப்புகள் குறித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி HCL மாநில மேலாளர் திரு. சுப்பிரமணியம் உரையாற்றினார். மாணவர்கள் தங்கள் வாழ்க்கை பாதையை எவ்வாறு தேர்வு செய்வது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதீஷ்குமார் உரையாற்றினார்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரி மனித நேயம் குறித்து நாமக்கல் மாவட்ட அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர் முனைவர் வெஸ்லி உரையாற்றினார். தொழில் வழிகாட்டுதல் குறித்து நாமக்கல் மாவட்ட நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி பொருளியல் துறை தலைவர் முனைவர் புவனேஸ்வரி, நாமக்கல் மாவட்டம் ரெட்டிபட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நாராயணமூர்த்தி, தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன், நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் செல்வம் போன்றோர் உரையாற்றினார்.

நாமக்கல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் நன்றியுரை கூறினார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து 1000 க்கு மேற்பட்ட மாணவர் மாணவிகள் மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மாணவர்கள் தங்களது எதிர்கால கனவுகள் மற்றும் துறை சார்ந்த விளக்கங்களை குறித்து சிறப்பு விருந்தினரிடமிருந்து தெரிந்து கொண்டனர். விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரயின் வணிகவியல் துறை இயக்குநர் சசிகுமார் , துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story