தென்னூர் மேம்பாலம் மூடப்படும் என்ற அறிவிப்பால் அதிர்ச்சி

தென்னூர் மேம்பாலம்  மூடப்படும் என்ற அறிவிப்பால் அதிர்ச்சி

பாலம் பராமரிப்பு பணி தொடக்கம்

மாரிஸ் மேம்பால பராமரிப்பு பணிகள் நிறைவு பெறாத நிலையில், தென்னூர் பாலத்தை மூட ரெடியான அதிகாரிகள்.

திருச்சி தென்னூர் சாலை மேம்பாலத்தில் (RoB) பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

தென்னூர் சாலை மேம்பாலத்தை பராமரிக்க ரூ.41 லட்சம் பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. அதன்படிசென்னையை சேர்ந்த நிறுவனம் பராமரிப்பு பணியை மேற்கொள்ள உள்ள நிலையில், இன்று பாலத்தின் போக்குவரத்தை மூடுமாரு போக்குவரத்து காவல்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்த பாலம் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து பெரிதாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், பாலத்தின் இரண்டு பக்கத்திலுள்ள அடுக்குகள் மற்றும் தாங்கு உருளைகளுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ள (strip seal)விரிவாக்க இணைப்புகள் மாற்றப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே மாரிஸ் மேம்பால பராமரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அந்த பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கும் போது, தென்னூர் பாலமும் விரைவில் மூடப்படும் என்ற அறிவிப்பு வாகன ஒட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாற்றுவழியாக செல்லும் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

Tags

Next Story