கோலியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
திருக்கல்யாண உற்சவம்
விழுப்புரம் கோலியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் அடுத்த கோலியனூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பூமி ஸ்ரீ நீலா தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. இதை யொட்டி, காலை 7 மணிக்கு மூலவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள், உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. பின்னர், மூலவர் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தாயார்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதை தொடர்ந்து, காலை 10 மணிக்கு உற்சவர் ஸ்ரீ ஆண்டாள் தாயார் ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை 11.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராஜகோபாலன் பட்டாச்சாரியார், கோலியனூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story