திருக்கார்த்திகை தீபத்திருவிழா - மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

திருக்கார்த்திகை தீபத்திருவிழா - மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆய்வு
 மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், கள ஆய்வு 

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அம்மணி அம்மன் கோபுரம், இராஜ கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், கள ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலை சுற்றி நெடுஞ்சாலை துறையின் மூலமாக சிமெண்ட கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. அதில் பேர்பிளாக் அமைக்கும் பணிகள் ஓரிரு தினங்களில் நிறைவு பெற உள்ளன. நகராட்சி நிர்வாக துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவுநீர் கால்வாய் மற்றும் மின்பகிர்மான கழகம் மூலம் திருக்கோயில் சுற்றி விழா காலங்களின் மின்தடைகள் ஏற்படாத வண்ணம் மின் இணைப்பு சல்லிகளை சரிசெய்தல், மின்வடம் பதித்தல் உள்ளிட்ட பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, தற்பொழுது சாலை பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளன. அதில் ஒரு சில சிறு பணிகள் ஓரிரு தினங்களிலும், அனைத்து பணிகளும் விரைவில் நிறைவு பெற உள்ளன. இப்பணிகள் மட்டுமில்லாமன் சாலை ஓரங்களில் கடைகளை அமைத்திருக்கும் சிறு வணிகர்கள் ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்க கூடாது. அதைமீறி சிறு கடைகள் வைக்கும் வணிகர்கள் மீது துறை ரீதியாக அபராதம் விதிக்கப்படும். மேலும் கடையின் உரிமையாளர்கள் விளம்பர பதாகைகள் அமைக்கவும், கடையின் முகப்பில் மேற்கூரை அமைந்தல் கூடாது என உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. தற்போது நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி நிரவாகத்தின் மூலம் இராஜ கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம். பே கோபுரம், திருமஞ்சன கோபுரம் ஆகிய பகுதியில் சாலைகளை செய்தல், பேவர்ப்ளாக் அமைத்தல், பொது மக்கள் மற்றும் பக்தர்கள் இடையூறு இல்லாமல் செல்வதற்கு அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டுமென இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், அறிவுறுத்தினார்.

Tags

Next Story