திருக்குவளை அங்காள பரமேஸ்வரி கோயில் சித்திரை பெருவிழா
நாகை மாவட்டம் திருக்குவளை அங்காள பரமேஸ்வரி கோயில் சித்திரை பெருவிழா நடைபெற்றது
நாகை மாவட்டம் திருக்குவளை அங்காள பரமேஸ்வரி கோயில் சித்திரை பெருவிழா நடைபெற்றது. நாகை மாவட்டம் திருக்குவளை அங்காள பரமேஸ்வரி கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த 25 ஆம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் பூச்சொரிதலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு இரவு அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் இரவு சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது. நாளை 1ஆம் தேதி சக்தி கரகம் இருளனன், பெரியாச்சி ஊர்வலமும், 2ம் தேதி அதிகாலை அக்னி கப்பரை ஊர்வலமும் மாலை பரமசிவன் ருத்ரராகவும், பார்வதி தேவி காட்டேரியாக பெரியார்ச்சி உடன் மயான கொல்லை செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அது தொடர்ந்து 4ம் தேதிவிளையாட்டு காப்புகளையுதல் நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் கிராமவாசிகள் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்