திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் திருமழிசை அங்கன்வாடி மையம்
அங்கன்வாடி மையம்
திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட13வது வார்டு பகுதியில் அங்கன்வாடி மையம் இல்லாமல் குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் கோரிக்கையின் படி பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து 2023 ஜூலையில் அங்கன்வாடி மைய கட்டட பணி துவங்கி நடந்து வந்தது. இதேபோல் இந்த அங்கன்வாடி மையம் அருகே 2022 - 23ம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபாய் மதிப்பீல் படிப்பகம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணியும் துவங்கி நடந்து வந்தது.
இந்த இரு கட்டட பணிகள் கடந்த ஆறு மாதத்திற்கு முன் நிறைவடைந்து திறப்பு விழா நடத்தப்படாமல் வீணாகி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கன்வாடி, படிப்பகம் ஆகிய அரசு கட்டடங்களை திறப்பு விழா நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென திருமழிசை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.