திருநெல்வேலி- சென்னை சிறப்பு ரயில் ஜூன் 28 வரை நீட்டிப்பு

திருநெல்வேலி- சென்னை சிறப்பு ரயில் ஜூன் 28 வரை நீட்டிப்பு

பேராவூரணி வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி- சென்னை எழும்பூர் கோடைகால வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


பேராவூரணி வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி- சென்னை எழும்பூர் கோடைகால வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பேராவூரணி வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி- சென்னை எழும்பூர் கோடைகால வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள், வர்த்தகர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர், மாணவர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, தெற்கு ரயில்வே நிர்வாகம் திருநெல்வேலியில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக சென்னை எழும்பூருக்கு (வண்டி எண் 06070 /06069) தீபாவளி, பொங்கல் பண்டிகை நேரத்தில் விழாக்கால சிறப்பு ரயில்களை இயக்கியது.

தற்போது கோடைக் காலம் என்பதால், பயணிகள் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, ஏப்ரல் மாதம் முதல் திருநெல்வேலி- சென்னை எழும்பூர்-திருநெல்வேலி கோடை கால வாராந்திர சிறப்பு ரயிலை பேராவூரணி வழியாக மீண்டும் இயக்கி வருகிறது. இந்த ரயில் சேவையை தற்போது ஜூன் 28-ஆம் தேதி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து எழும்பூர் நோக்கி, ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். மறுவழித்தடத்தில் எழும்பூரிலிருந்து ஜூன் 7, 14, 21, 28 தேதிகளில் திருநெல்வேலிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருநெல்வேலியில் இருந்து இந்த ரயில் (வண்டி எண்: 06070) வியாழக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு பேராவூரணிக்கு இரவு 11.28-க்கு வந்து சென்னை எழும்பூரை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு சென்றடைகிறது. மறுவழித்தடத்தில் இந்த ரயில் (வண்டி எண்: 06069) சென்னை எழும்பூரில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு பேராவூரணிக்கு இரவு 11.35 மணிக்கு வந்து, திருநெல்வேலிக்கு சனிக்கிழமை காலை 7.10மணிக்கு சென்றடையும். இதற்கான பயணச் சீட்டு முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த ரயில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் பகுதியில் இருந்து எழும்பூருக்கும், தென்மாவட்டங்களுக்கும் செல்ல பயனுள்ளதாக இருந்து வருகிறது. எனவே இந்த ரயிலை தொடர்ந்து இயக்கி வரும் தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு பயணிகள், வர்த்தகர்கள், மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story