திருநெல்வேலியில் 21.40 மில்லி மீட்டர் மழை பதிவு

திருநெல்வேலியில் 21.40 மில்லி மீட்டர் மழை பதிவு

மழை (பைல் படம்)

திருநெல்வேலி மாவட்டத்தில் 21.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் நேற்றும் மழை பெய்த நிலையில் இன்று (மே 26) காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 21.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக நம்பியாறு அணை பகுதியில் 6 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story