திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் இயக்கம்

திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் இயக்கம்

சோதனை ஓட்டம் 

ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த ரயில் தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. நாளை முதல் திருநெல்வேலி- திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் மட்டும் இயக்க வாய்ப்புகள் உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17,18 ஆம் தேதிகளில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ரயில் தண்டவாளம் சேதமடைந்தது. இந்த நிலையில் தண்டவாளம் சீரமைக்கப்பட்டு நேற்று பயணிகள் இல்லாமல் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே நாளை முதல் பாசஞ்சர் ரயில் மட்டும் இயக்க வாய்ப்புகள் உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Tags

Next Story