திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு
திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு
திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் தென் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி பகுதிகளை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. இதனால், நெல்லை - தூத்துக்குடி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் கோரம்பள்ளம் அருகில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளத்தால் மறவன் மடம், புதுக்கோட்டை, நாச்சியார்புரம் உள்ளிட்ட 10 கிராமங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வீடுகளில் நீர்புகுந்துள்ளதால், அங்குள்ள மக்களை மீட்கும் பணியில் இராணுவ வீரர்கள் கடலோரக் காவல்படை, தீயணைப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கோரம்பள்ளம் அருகில் அந்தோணியார்புரத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து நான்குவழிச்சாலை சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக த் துண்டிக்கப்பட்டது.

Tags

Next Story