திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி ஊராட்சியில் உள்ள நீலி வனநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.


மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி ஊராட்சியில் உள்ள நீலி வனநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி ஊராட்சியில் உள்ள நீலிவனநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நநடைப்பெற்றது.கடந்த 18-ந்தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 19-ந் தேதி திருக்கல்யாணமும் நடைபெற்றது. நேற்று இரவு தங்கக்குதிரை வாகனம், காமதேனு வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியத்தனர்.

தொடர்ந்து வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்ட விழா இன்று நடைபெற்றது.முன்னதாக சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 6 மணிக்கு மேல் தேர்க்கால் பார்த்தல் மற் றும் நடராஜர் புறப்பாடு நடை பெறுகிறது. இரவு 7 மணிக்கு கேடயத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 24-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கும். 25-ந் தேதி இரவு பஞ்ச பிரகார புறப்பாடும் நடைபெ றுகிறது. 26-ந் தேதி காலை 7 மணிக்கு விடையாற்றி மற்றும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள், பக்தர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story