திருப்பைஞ்சீலி வனத்தாய் அம்மன் கோவில் திருவிழா

திருவிழா
திருச்சி மாவட்டம், திருப்பைஞ்சீலி வனத்தாய் அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பரம் புறப்பாடு நேற்று இரவு நடைபெற்றது.
முன்னதாக வசந்தமண்டபத்தில் விநாயக்ருக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங் காரத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து மேளதாளங் கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் ஏராளமான பக்தர்கள் சப்பரத்தை வனத்தாயி அம்மன் கோவிலுக்கு இழுத்துச் சென்றனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொ டர்ந்து வடக்குதெரு, தெற்குத் தெரு, செட்டியார்தெரு, சன்னதிதெரு உள்ளிட்ட முக்கிய தெருக்களின் வழியாக புறப்பாடாகி வீடு, வீடாகச்சென்று பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார்.இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு கள் வெட்டி வழிபாடு நடத்தப்பட்டது. இவ்விழாவிற்க்கான விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மனோகரன், கிராம பட்டயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இன்று (புதன் கிழமை) முதல், அம்மன் மூவ ராயன்பாளையம், ஈச்சம் பட்டி, வால்மால்பாளையம், கவுண்டம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு புறப்பாடாகிறார். நாளை (வியாழக்கிழமை) வனத்தாயி அம்மன்கோவில் அம்மனுக்கும், ஆதாலி கருப்புக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
