திருப்பாலைத்துறை திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா !

திருப்பாலைத்துறை திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா !

திருவிழா

திருப்பாலைத்துறை திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் தாலுகா,திருப்பாலத்துறை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழா கடந்த ஜூன் மாதம் 10 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு தினந்தோறும் பாரதக்கதை, சிறப்பு நாடக நிகழ்ச்சிகள் நடைபெறறது.

முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவை முன்னிட்டு வடக்குவீதி அருகே குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து சக்திகரகம் எடுத்து மேளதாளத்துடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோயில் அருகே அமைக்கப் பட்டிருந்த தீகுண்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் தீமித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

தீமிதி திருவிழாவை திருப்பாலைத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கண்டுகளித்தனர். விழாகுழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி,செயலாளர் ராஜேந்திரன்,பொருளாலர் சிவகண்ணன்,துணைதலைவர் சுகுமார், ஜெயபிரகாஷ், சின்னையன், கோவிந்தராஜ்,சேகர் உட்பட விழா குழுவினர், கிராமவாசிகள்,இளைஞர் குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் அசோக் மேற்பாற்வையில் ஏராளமான போலீசார் செய்திருந்தனர்.

Tags

Next Story