திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோவிலில் புகுந்த வெள்ளம்

திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோவிலில் புகுந்த வெள்ளம்

 திருப்பதிச்சாரம் திருவாழ்மார்பன் பெருமாள் கோவிலில், மழை காரணமாக கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது. 

திருப்பதிச்சாரம் திருவாழ்மார்பன் பெருமாள் கோவிலில், மழை காரணமாக கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழமையான கோயில்களில் ஒன்றான திருப்பதிச்சாரம் திருவாழ்மார்பன் பெருமாள் கோவிலில், மழை காரணமாக கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது. மேலும் கோயிலில் சுற்றியுள்ள வீடுகளிலிலும் வெள்ள நீர் புகுந்தது. தகவல் அறிந்ததும் குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், கோயில்களின் இணை ஆணையர் ரத்னவேல்பாண்டியன், மராமத்து பொறியாளர் ராஜ்குமார், கோவில் மேலாளர் சண்முகம்பிள்ளை உடனடியாக கோயிலுக்குள் சென்று இடுப்பு அளவு வெள்ளத்தில், கோயிலில் எங்கெங்ல்லாம் சேதம் அடைந்துள்தா, விக்ரங்கள், கொடிமரம் சேதம் ஏற்பட்டுள்ளதாக எனவும் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் மழையால் பாதிக்கப்பட்ட கோயில் அருகில் உள்ள பூசாரிகள், மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளான அரிசி, பழம், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் வழங்கினர்.

Tags

Next Story