திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா் கோயில் உண்டியல்  காணிக்கை எண்ணும் பணி

காணிக்கை எண்ணும் பணி 

திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ. 22 லட்சத்து 4 ஆயிரத்து 887 உள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டது.
திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் லெட்சுமணன், ஆய்வாளா் சீனிவாசன், திருக்கோயில் செயல் அலுவலா் ஜெய்கிஷன் மற்றும் தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவா்கள் ஈடுபட்டனா். இதன் முடிவில், உண்டியல் காணிக்கைகள் மூலம் ரொக்கம் ரூ. 22, 04,887, தங்கம் 4 கிராம் 500 மி.கிராம், வெள்ளி 29 கிராம் 500 கிராம் , வெளிநாட்டு பணத்தாள்கள் 112 கிடைத்துள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story