29 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இடத்திற்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி கவன ஈர்ப்பு மனு

29 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இடத்திற்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி  கவன ஈர்ப்பு மனு

கவன ஈர்ப்பு மனு அளித்த திமுகவினர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு மனு அளித்த திமுகவினர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இடத்திற்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி திமுகவினர் கவன ஈர்ப்பு மனு அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள 123.134/1 என்ற சர்வே எண்களைக் கொண்ட இடத்தினை திருப்பத்தூர் நகரப் பகுதியுடன் சேர்த்து சர்வே செய்யப்பட்டுள்ளது. அதன் பின்பு திருப்பத்தூர் நகரத்திலிருந்து நீக்கப்பட்டு 1993ஆம் ஆண்டு நில அளவு செய்யப்பட்டுள்ளது. நில அளவு செய்யப்பட்டு 29 வருடங்கள் ஆகியும் இதுவரை அந்த இடத்திற்கான பட்டாவணங்கள் வழங்கப்படவில்லை என பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி சட்டமன்றத்தில் பேசி பட்டா வழங்கலாமென ஆணை பெறப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் 29 ஆண்டுகள் கடந்தும் பட்டா வழங்காததால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தால் பட்டா வழங்க கோரி திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சிஎன். அண்ணாதுரை மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோருடன் பரிந்துரை மனுக்களாக பெற்று அதனை இன்று கவன ஈர்ப்பு சம்பந்தமாக திருப்பத்தூர் திமுக முக்கிய நிர்வாகிகள் கொண்டு வந்து மாவட்ட வருவாய் அலுவலர்களிடம் வழங்கினர்.

இந்த நிகழ்வில் கந்திலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் மோகன்ராஜ், மாவட்டநெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி அசோகன், மற்றும் ஜெகதீசன், அமுதா ரவி, திமுக முக்கிய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story