திருப்பத்தூர்: தேசிய கொடியேற்றிய ஆட்சியர்

திருப்பத்தூர்: தேசிய கொடியேற்றிய ஆட்சியர்

அணிவகுப்பு மரியாதை 

திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 75வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலையார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இந்திய நாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் காவல் துறையினரின் சிறப்பான அணிவகுப்பை மரியாதையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.. மூவண்ண பலூன்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பறக்க விட்டனர் அதேபோல் சமாதான புறாவையும் பறக்க விட்டனர்.

இவ்விழாவில் கமோன்டோ படையினரின் வீரதீர செயல் சாகாச நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. மேலும் சிறப்பாக பணியாற்றிய 27 காவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சாலை விபத்து குறித்தும் கட்டுரைப் போட்டிகள் நடந்தது அதில் வெற்றி பெற்ற முதல் முதல் மூன்று மாணவர்களான தீபிகா, ராகுல், வாகித்கான், ஆகிய ௩ பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசின் சார்பில் 102 பயணிகளுக்கு 33லட்சத்து 2ஆயிரத்து 216 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story