திருப்பத்தூர் பாமக ஒன்றிய செயலாளர் சாவில் மர்மம் : சாலை மறியல்

சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ஐயப்பன் (35) இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சியில் திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் சிவராஜ் பேட்டை பகுதியில் நேற்று இரவு மர்மமான முறையில் முகம் மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் திருப்பத்தூர் நகர போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த உறவினர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஐயப்பன் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக கூறி திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி செல்லும் ஜின்னா சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போலீசார் உடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது மேலும் சிவராஜ் பேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இருப்பது குறிப்பிடத்தக்கது
