திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி  பேராசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர்கள் ஒன்றிணைந்து திருப்பத்தூர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் பார்த்திபராஜா தலைமையில் 10க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் உயர்கல்வித்துறையை கண்டித்து கருப்பு பேட்ச் அணிந்தும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் முக்கிய கோரிக்கைகளாக அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு தமிழக அரசு பணி மேம்பாட்டினை வழங்கி வருகிறது ஆனால் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு இதுவரை பணி மேம்பாடு வழங்கவில்லை.

அதனை உடனடியாக வழங்க வேண்டும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பாரபட்சம் காட்டக்கூடாது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியில் பேராசிரியர்கள் 116 பேருக்கு 7 மாத ஊதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story