மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சியில் திருப்பத்தூர் 6-ம் இடம்
உலக மாற்றுத்திறனாளிகள் நாள் விழா
தமிழக அளவில் மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சியில் திருப்பத்தூர் மாவட்டம் 6 ஆம் இடத்தில் உள்ளது, மாவட்ட ஆட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் மும்முனைகளாக இருந்து மாற்றுத்திறனாளிகள் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகுக்கின்றனர் என அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாயையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கோடியே 24 லட்சத்து 21 ஆயிரத்து 150 ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது, இதில் சிறப்பு அழைப்பளாராக பங்கேற்ற நெடுஞ்சாலை மற்றும் பொதுபணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய பின்னர், விழாவில் பேசிய அமைச்சர், மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சியில் தமிழக அளவில் 6 ஆம் இடத்தில் திருப்பத்தூர் மாவட்டம் உள்ளது, அதற்காக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மும்முனையாக பணியாற்றி வருகின்றனர் என பேசினார். மேலும் இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story