திருப்பத்தூர் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை பொதுக் குழு கூட்டம்

திருப்பத்தூர் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை பொதுக் குழு கூட்டம்

வணிகர் சங்க பொதுக் கூட்டம்

திருப்பத்தூர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி கச்சேரி தெரு பகுதியில் உள்ள திருப்பத்தூர் வர்த்தக சங்க கட்டிடத்தில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட பலசரக்கு மாளிகை வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் மாவட்ட துணை தலைவர் சிகாமணி தலைமையில் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன வணிகர்களுக்கு தமிழக அரசால் மருத்துவ காப்பீடு ரூபாய் 5 லட்சம் வரை வழங்க வேண்டும் இயற்கை சீற்றங்களை ஏற்படும் பாதிப்புக்கு உள்ளாகும் வணிகர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் வட்டி இல்லா கடன் வழங்குவது போன்று சிறு குறு மனிதர்களுக்கு நகர கூட்டுறவு வங்கியின் மூலம் வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும் வணிகர்கள் மின்னணு எடை தராசு முத்திரை இடுதல் ஆண்டுக்கு ஒரு முறை இருப்பதை மாற்றி இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கால நீட்டிப்பு வழங்க வேண்டும்

நகராட்சி பகுதியில் உள்ள வணிகர்கள் தொழில் வரி மார்க்கெட் கமிட்டி உணவு பாதுகாப்பு உரிமம் போன்ற இனங்களில் செலுத்துவதை ஒரே வழியாக செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் திருப்பத்தூர் நகராட்சி மீனாட்சி நிலையம் பேருந்து நிறுத்தம் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்கு வட்டி இல்லா கடனுதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில துணை தலைவர் தெய்வசிகாமணி, பொதுச்செயலாளர் செளந்தரராஜன், மாவட்ட தலைவர் தேவராஜ், மாவட்ட செயலாளர் விவேகானந்தன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story