மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சுற்றுலா தொடக்கம்

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சுற்றுலா தொடக்கம்
மாற்றுத்திறனாளிகளுக்கு சுற்றுலா 
மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கான சுற்றுலா வருவாய் அதிகாரி தொடங்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கான சுற்றுலா வருவாய் அதிகாரி தொடங்கி வைத்தார்.

திருப்பூர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. 20 மாற்றுத்திறனாளி குழந்தைகள் பெற்றோர்களுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

திருப்பூரில் இருந்து புறப்பட்ட சுற்றுலா வாகனத்தை மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அரவிந்தகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி வசந்த ராம்குமார், சுற்றுலா மேம்பாட்டு குழு தலைவர் குளோபல் பூபதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story