அகழாய்வு தொடக்கப் பணியினை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு!
ஆய்வு
உடுமலைப்பேட்டை சோ. அம்மாபட்டி பகுதியில் கொங்கல்நகரம் அகழாய்வு தொடக்கப் பணியினை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலமைசெயலகத்திலிருந்து தொல்லியல் துறையின் சார்பில் 2024-ம் ஆண்டுக்கான அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்ததை தொடர்ந்து உடுமலைப்பேட்டை சோ. அம்மாபட்டி பகுதியில் கொங்கல்நகரம் அகழாய்வு தொடக்கப் பணியினை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டார். உடன் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாபன், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், தொல்லியல் அலுவலர் மற்றும் கொங்கல்நகரம் அகழாய்வு இயக்குநர் காவியா மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.
Next Story