அமராவதி பாசன பகுதிகளில் தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
திருப்பூர் மாவட்ட ஆட்சியர்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி பழைய மற்றும் புதிய பாசனப்பகுதிகளின் முறையற்ற வகையில் தண்ணீர் எடுப்பவர்களுக்கு செய்து கடுமையான நடவடிக்கைப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, அமராவதி பழைய மற்றும் புதிய பாசனப்பதிகளுக்கு பாசனத்திற்காக அமராவதி அணையில் இருந்து தேவைக்கேற்ப கண்ணீர் திறந்து விட அரசாணை பெறப்பட்டு தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கி வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி பழைய மற்றும் புதிய பாசனப்பகுதியில் முறையற்ற வகையில் தண்ணீர் எடுப்பதை தடுக்கும் பொருட்டு நீர்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, காவல் துறை மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் ஆகிய துறை அலுவலர்கள் அடங்கிய கூட்டு கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டு கண்காணிப்பு குழுவின் மூலம் அமராவதி வாய்க்கால்களில் முறையற்ற வகையில் தண்ணீர் எடுப்பது கண்டறியப்பட்டால் தண்ணீர் எடுப்பவர்கள் மீது காவல்துறையின் மூலம் வழக்கு பதிவு செய்து சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கிணறுகளின் மின் இணைப்புத் துண்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.