ரூ. 63.52 கோடி மதிப்பீட்டில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை திட்டபணிகள்

குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை தொடங்கி வைத்த மேயர் தினேஷ்குமார்.

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தலைமையில் சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.63.52 கோடி மதிப்பீட்டில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் சேதமடைந்த சாலைகளை சீரமைத்த, புதிய தார் சாலைகள், சிமென்ட் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டலத்தலைவர்கள் கோவிந்தசாமி (3-வது மண்டலம்). கோவிந்தராஜ் (2-வதுமண்டலம்),உமா மகேஸ்வரி (1-வது மண்டலம்), மாநகர தலைமை பொறியாளர் லட்சுமணன், துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம் உதவி ஆணையர்கள் முருகேசன், வினோத் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அனுசுயாதேவி, சகுந்தலா மாலதி,ஜெயசுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story