இந்து சமய அறநிலைத்துறையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

இந்து சமய அறநிலையத்துறை அழைப்பானை அறிக்கைக்கு விவசாயிகள், வீட்டு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு.

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள், இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அழைப்பாணை அறிக்கை எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோவில் நிலம் என்பதால் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் தரவில்லை எனில் நிலத்தை கோவில் நிர்வாகம் கையகப்படுத்தும் என அழைப்பானை அனுப்பியதை கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இனாம் நிலங்களை, இந்து சமய அறநிலையத் துறையும், வக்பு வாரியமும் 12 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை, சட்டவிரோதமாக அபகரிக்கும் பணிகளை செய்து வருவதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

பல்வேறு பத்திரங்களின் மூலம் நில உரிமை பெற்ற மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி அழைப்பானை அனுப்பி, அராஜகப் போக்குடனும், வழக்கை விசாரிக்கும் போது இந்திய உரிமையியல் நடைமுறை சட்டத்தின் படி விசாரிக்க வேண்டும் என்கின்ற சட்டத்தை மீறி, ஆவணங்களை கொடுக்காமலேயே, பதில் மனு தாக்கல் செய்வதற்கு சட்டப்படி கால அவகாசம் கொடுக்காமல், சட்டவிரோதமாக வீடு, மனை உரிமையாளர்களை, வீடுகளை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் எடுத்து வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வரும் 11ஆம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என இணை ஆணையர் கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும் வரும் 20 ஆம் தேதி வரை தேதி நீட்டிப்பு செய்யவில்லை எனில் காத்திருப்பு போராட்டத்தை தொடரும் என்ற இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு-மனை உரிமையாளர்கள் இயக்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story