மூலனூர் வஞ்சியம்மன் கோவில் தேரோட்ட விழாவில் அமைச்சர் கயல்விழி பங்கேற்பு

மூலனூர் வஞ்சியம்மன் கோவில் 42 ஆம் ஆண்டு தேரோட்டம் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்பு.

மூலனூர் வஞ்சியம்மன் கோவில் தேரோட்ட திருவிழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்வலி செல்வராஜ் பங்கேற்றார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூரில் பிரசித்தி பெற்ற வஞ்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தேர் திருவிழா மற்றும் லட்சார்ச்சனை பெருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 42,வது தேரோட்ட திருவிழா விநாயகர் வழிபாடு, முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் தொடங்கியது. இரவு நடைபெற்ற தேரோட்டத்திற்கு கோவில் முதன்மையாளர்கள் ராமநாதன், ராமசாமி ஆகியோர் முறைப்படி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் விநாயகர் வழிபாட்டுடன் லட்சார்ச்சனை நடக்கிறது. கலச பூஜை, வேள்வியுடன் இரவு லட்சார்ச்சனை நிறைவு பெறுகிறது. திருக்கல்யாணம் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிக்குப் பிறகுதிருத்தேர் எழுந்தருளல் நடை பெறுகிறது. இரவு திருத்தேர் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் தாராபுரம் மூலனூர், கன்னிவாடி, போளரை. வெள்ளகோவில், புதுப்பை, முத்தூர், காங்கேயம் கரூர் சின்னதாராபுரம் உள்ளிட்ட 100 மேற்பட்ட ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். அதில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், திமுக ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் விழாவில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நாளை விழாவின் நிறைவாக தீர்த்தக் காவடி செலுத்துதலும் மற்றும் அக்கினி கம்பம் கிணற்றில் விடுதலும், கொடி இறக்கம், மஞ்சள் நீர், மறு அபி ஷேகம் தீபாராதனையுடன் விழா நிறைவு பெறுகின்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் மற்றும் கோவில் குலத்தவர் செய்திருந்தனர்.

Tags

Next Story