பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கால வைப்புத்தொகை நிதியுதவி
கால வைப்புத்தொகை வழங்கல்
தாய்,தந்தையை இழந்த தொடக்க கல்வி பயிலும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கால வைப்புத்ததொகை நிதி உதவியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்கம், தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நிதிஉதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தாய் அல்லது தந்தையை இழந்த மாணவ மாணவிகளுக்கு கால வைப்புத்தொகை க்கான பத்திரங்களை வழங்கினார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் தேவராஜன் ஆகியோர் உள்ளனர்.
Next Story