”திருப்பூரில் சுங்கச்சாவடி அமைக்க வேண்டாம்”

அவிநாசி பாளையம் சாலையை சுங்கம் இல்லாத சாலையாக அறிவிக்க கோரிக்கை.

திருப்பூர் தாராபுரம் ரோட்டில் வேலம்பட்டியில் ஆக்கிரமிப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அவிநாசியில் இருந்து திருப்பூர் மாநகர் வழியாக அவிநாசி பாளையம் வரை செல்லக்கூடிய சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி நெடுஞ்சாலை துறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்க வசூல் செய்வதற்காக வேலம்பட்டி பகுதியில் சுங்கச்சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடி கட்டிடம் நீர்நிலை புறம்போக்கில் உள்ள குட்டையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதை அகற்ற வேண்டும் எனவும் சுங்கச்சாவடி எதிர்பாளரான ஜிபிஎஸ் கிருஷ்ணசாமி உள்ளிட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் அதிகாரிகளிடம் மனு அளித்தார்கள்.

சுங்கச்சாவடி தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் தீர்ப்பில் அந்த இடத்தை உரிய ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்ற உத்தரவு வந்த நிலையில், தொடர்ச்சியாக சுங்கச்சாவடியை செயல்படுத்த முயல்வதாகவும், ஆக்கிரமிப்பு அகற்றாமல் செயல்படுத்தக்கூடாது என்றும் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுங்கச்சாவடி எதிர்ப்பாளர்கள் மனு அளித்தனர்.

உயர்நீதிமன்ற உத்தரவு நகலை மாவட்ட ஆட்சியரிடம் அளித்து சுங்கச்சாவடி ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்றவும், 163 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் முறையாக நான்கு வழிச்சாலையாக அமைக்காமல் பல்வேறு வசதிகள் இல்லாமல் இருக்கக்கூடிய சாலையில் சுங்க வசூல் செய்யக்கூடாது என்றும், விபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய சாலையை சுங்கமற்ற சாலையாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டு மனு அளிக்கப்பட்டது.

Tags

Next Story