உலக மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய பெண் காவலர்கள்

உலக மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய பெண் காவலர்கள்

உலக மகளிர் தினம் கொண்டாட்டம்

திருப்பூர் தெற்கு காவல் நிலைய சரகத்தில் உலக மகளிர் தினத்தை ஆடல் பாடலுடன் உற்சாகமாக கொண்டாடினர்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் பெண் காவலர்கள் கேக் வெட்டி ஆடல் பாடலுடன் உற்சாகமாக கொண்டாடினர்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் பணியாற்றக்கூடிய பல்வேறு இடங்களில் மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் திருப்பூர் தெற்கு சரக காவல்துறையில் பணியாற்றக்கூடிய காவலர்கள் சார்பில் ராயபுரம் பகுதியில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில். உதவி ஆணையர் நாகராஜன் தலைமையில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முன்னதாக தெற்கு சரக காவல் உதவி ஆணையர் நாகராஜன் காவல்துறையினருடன் சேர்ந்து கேக் வெட்டி மகளிருக்கு இனிப்புகளை வழங்கினார் . தொடர்ந்து காவல்துறையில் பணியாற்றி வரும் பெண்கள் பாடல்கள் பாடியும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டும் மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்ற காவலர்களுக்கு உதவி ஆணையர் பாராட்டுகளையும் நினைவு பரிசுகளையும் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு சரகத்திற்கு உட்பட்ட பெண் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story