திருப்புவனம் சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

திருப்புவனம் சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

விற்பனைக்கு வந்த ஆடுகள் 

திருப்புவனம் கால்நடை சந்தையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் ஆடு, கோழி வாங்க குவிந்ததால் விலை கிடு கிடு வென உயர்ந்து காணப்பட்டது. தற்போது வரை ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்று உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்புவனம் கால்நடை சந்தை, மாவட்டத்திலேயே அதிகளவு கால்நடைகள் இப்பகுதியில் வளர்ப்பதால் விவசாயிகள் சந்தையில் கால்நடைகளை விற்பனை செய்து தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள், சிவராத்திரி, தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட சமயங்களில் சந்தையில் ஆடு, கோழி வாங்க பலரும் வருகை தருவதால் விலை உயரும், வரும் 8ம் தேதி சிவராத்திரி கொண்டாடப்பட இருப்பதால் கோயிலுக்கு விரதம் இருப்பவர்கள் நேர்த்திகடனாக ஆடு, கோழி, சேவல் வாங்கி பலியிடுவது வழக்கம்.

இதற்காக இன்று திருப்புவனம் சந்தையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் சுற்றுவட்டார கிராங்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்தன. அதிகாலை ஐந்து மணி முதல் சந்தை விறுவிறுப்பாக நடந்தது. 10கிலோ எடை கொண்ட ஆடு கடந்த சந்தையில் 7 ஆயிரம் முதல் 8000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த சந்தையில் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இன்றைய சந்தையில் கேரளா, மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகளில் கால்நடைகள் வாங்க குவிந்திருந்தனர். இதுவரை 3 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடந்துள்ளது.

Tags

Next Story