திருப்பூர் : வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது!

திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் வழி பெரிய ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (35). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் சம்பவத்தன்று பணி முடிந்து ரயில்வே மேம்பாலம் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டுள்ளார். இவரை வழிமறித்து லிப்ட் கேட்டு மறித்துள்ளனர். தொடர்ந்து ராஜ்குமாரை கீழே தள்ளிவிட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்று ஓட்டம் பிடித்துள்ளனர். அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அணில் குமார் சம்பவத்தை கண்டு உடனடியாக ஓடியவர்களை துரத்திச் சென்றுள்ளார்.

சிறிது தூரம் ஓடிய நிலையில் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளார். விசாரணையில் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த அருள் (22) மற்றும் அழகர்சாமி (24) என்பதும் , இவர்கள் ராஜ்குமாரிடம் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. உடனடியாக செல்போனை மீட்டு இருவரையும் கைது செய்தனர். கைது செய்த இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலேயே வழிப்பறியில் ஈடுபட்டவர்களை துரத்திச் சென்று பிடித்த கொங்கு நகர் சரக உதவி ஆணையர் அனில் குமாரை மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு பாராட்டினார்.

Tags

Next Story