திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருப்பூர் சிக்கன்னா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் படிக்கின்ற மாணவர்கள் ஆழ்ந்த அறிவு பெற்றிருக்க வேண்டும் என எழுத்தாளர் பெருமாள் முருகன் பேச்சு.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக எழுத்தாள் பெருமாள் முருகன் கலந்துகொண்டு மாணவ&மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். முதுநிலை மாணவி திவ்யா, வாணி, இளங்கலை மாணவர் பிரபாகரன் ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர். மொத்தம் 781 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் எழுத்தாளர் பெருமாள் முருகன் பேசியதாவது நமது முன்னோர்களுக்கு கிடைக்காத கல்வி வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. இதனை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற பொறுப்பு நமக்கு வந்து சேர்கிறது. கடந்த காலங்களை விட தற்போது கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளி படிப்பை முடிக்கும் அனைவருக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அந்த அளவுக்கு கல்லூரிகள் பெருக வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசே இப்போது கல்லூரிகளில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து, வேலைக்கு தயார்படுத்துகிறது. மாணவர்கள் எந்த துறையில் படிக்கிறோமோ அந்த துறையில் ஆழ்ந்த அறிவு பெற்றவராக இருக்க வேண்டும். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பது தமிழர் மரபு. எனவே வேலைவாய்ப்புக்கு மட்டும் என்று கருதாமல், ஒரு அறிவுத்துறையை பயில வேண்டும் என்ற நோக்கில் நாம் கல்வியை கற்க வேண்டுமென்று கூறினார்.
Next Story