திருப்பூர் மாவட்டம், சேவூரில் ரூ. 2 1/2 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்!

திருப்பூர் மாவட்டம், சேவூரில் ரூ. 2 1/2 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்!

நிலக்கடலை

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2 1/2 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் போனது.
சேவூரில் ரூ. 21/2 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு 174 மூட்டைகள் நிலக்கடவையை விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர். இதில் திருப்பூர் மற்றும் ஈரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரகம் ரூ. 6,850 முதல் ரூ. 7,100 வரையிலும், இரண்டாம் ரகம் ரூ. 6,450 முதல் ரூ. 6,800 வரையிலும், மூன்றாம் ரகம் ரூ. 6,000 முதல் ரூ. 6,400 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story