திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டம்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் பின்னலாடை சரக்குகளுக்கு காப்பீடு பெறுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் பின்னலாடை சரக்குகளுக்கு காப்பீடு பெறுவது தொடர்பான கூட்டம். மழை வெள்ளம் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள சரக்கு முனையங்களில் மழைநீர் தேங்கியதில், திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் பின்னலாடை ரகங்கள் சேதம் ஆகி உள்ளன.

நல்ல நிலையில் உள்ள சரக்குகளை உடனே வர்த்தகர்களுக்கு அனுப்பவும், சேதமான ஆடைகளுக்கு, உரிய நிவாரணம் அல்லது காப்பீடுபெறவும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்றுமதியாளர்கள், வர்த்தக ஒப்பந்த செய்யும்போது கடல் சார் போக்குவரத்துக்காக தனியே காப்பீடு செய்யும் வழக்கம் உள்ளது.

அவ்வாறு காப்பீடு செய்திருந்தால் சேதமான சரக்குகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும். அதற்கான ஏற்பாடுகளை ஏற்றுமதியாளர்கள் சங்கம் துவங்கி உள்ளது. துறைமுக சரக்கு முனையத்தில் ஏற்பட்ட வெள்ளசேதத்துக்கு காப்பீடு பெறுவது, ஏற்றுமதி சரக்குகளை கையாள்வது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் வழிகாட்டுதலின் படி நேற்று ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

இதற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொது செயலாளர் திருக்குமரன் தலைமை தாங்கி பேசினார். இணை செயலாளர் குமார் துரைசாமி, செயற்குழு உறுப்பினர் சிவ சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காப்பீட்டு திட்ட ஆலோசகர்கள் மோகன்குமார், சந்தானம் ஆகியோர் பேசினர்.

அப்போது அவர்கள் பேசியதாவது:- திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பின்னலாடை சரக்குகளுக்கு கண்டிப்பாக காப்பீடு செய்ய வேண்டும். காப்பீடு செய்யும் பட்சத்தில் இயற்கை பேரிடர் காலங்களில் உதவிகரமாக இருக்கும். காப்பீடு செய்யாதவர்கள் விரைவாக காப்பீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Tags

Next Story