திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு வாஸ்து சாந்தி பூஜை, அங்குபூஜை, கணபதி பூஜை, முதல் காலயாக பூஜை, இரண்டாம் காலயாக பூஜை, தீபாராதனை போன்றவை நடந்தது-. இந்நிலையில் நேற்று முன்தினம் மூன்றாம் கால யாக பூஜை, இரவு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று அதிகாலை 4 மணிக்கு 4&ம் கால யாக பூஜை, 6 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. 7 மணிக்கு அறம் காத்த கோட்டை மாரியம்மனுக்கு யாக சாலை பூஜை நடந்தது. 9.15 மணிக்கு கோட்டை ஸ்ரீ மாரியம்மனுக்கு ராஜகோபுரம், மூலாலய கோபுரம், நுழைவு வாயில் கோபுரம் மற்றும் ஸ்ரீ கோட்டை மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 2 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 7 மணிக்கு அம்பாள் திருவீதி உலாவும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Tags

Next Story