திருப்பூர் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
திருப்பூர் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பூர் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருப்பூர் மாநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வருகிறது. இந்த கோவிலில் மாசி மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறுவது வழக்கம். அதன் படி நேற்று நள்ளிரவு பூங்கா சாலையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலிருந்து மேளதாளங்கள் மூலமாக கம்பம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோவிலில் நடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை முதல் ஏராளமான பெண்கள் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து திருப்பூர் மாநகரின் பல்வேறு கோவில்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பூச்சட்டி ஏந்தி மேளதாளம் முழங்க மாநரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கும்,பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story