திருப்பூர் : 265 ஊராட்சிகளில் நாளை கிராமசபை கூட்டம்

திருப்பூர் :  265 ஊராட்சிகளில் நாளை கிராமசபை கூட்டம்

 மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் 

திருப்பூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று 265 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினமான வருகிற 26 ம் தேதி அன்று காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும். இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். இது போல் மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்),ஜல் ஜீவன் இயக்கம் போன்றவை குறித்து திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்ப்பட்ட 265 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, கிராம பொது மக்கள் மேற்படி கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்காணும் பொருள்கள் மற்றும் அந்தந்த ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்தும் விவாதித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. -

Tags

Next Story