ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் வாபஸ்.

திருப்பூர் மாவட்ட ஹாலோ பிளாக் உற்பத்தியாளர் சங்கம் வேலை நிறுத்தத்தை வாபஸ் என அறிவித்துள்ளது.

பல்லடம் ஹாலோபிளாக் சங்க வேலை நிறுத்தம் வாபஸ். ஏழு நாள் அறிவித்த வேலை நிறுத்தம் மூன்றாவது நாளில் விலை ஏற்றப்பட்டு நாளை முதல் ஹாலோ பிளாக் உற்பத்திகள் தொடரும். திருப்பூர் மாவட்ட ஹாலோபிளாக் உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு. திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து ஏழு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஹாலோ பிளாக் கற்களுக்கு மூலப் பொருளாக விளங்கக்கூடிய எம்சாண்ட் மற்றும் கிரஷர் யூனிட் ஒன்றுக்கு சுமார் 1000 ரூபாய் வரை கல்குவாரி உற்பத்தியாளர்கள் உயர்த்திய காரணத்தால் தங்களால் அதே பழைய விலைக்கு ஹாலோ பிளாக் கற்களை உற்பத்தி செய்ய முடியாது, என்றும் அரசு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி விலை ஏற்றத்தை தடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தாங்கள் உற்பத்தி செய்யும் 4,6,8 இன்ச் ஹாலோ பிளாக் கற்களின் விலை ஐந்து ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை உயரும் என்று இதன் சங்க செயலாளர் நாச்சிமுத்து என்பவர் அறிவித்தார்.

கடந்த 7 ஆம் தேதி முதல் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஹாலோ பிளாக் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்து இன்றுடன் மூன்றாவது நாள் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் பல்லடம் அருகே ராயர்பாளையம் பகுதியில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அப்போது அரசு தரப்பில் தீர்மானங்கள் நிறைவேற்றிக் கொடுத்தும் வேலை நிறுத்தம் செய்தும் கவனம் ஈர்க்க எந்த நடவடிக்கையும் இல்லை என்று குற்றச்சாட்டு வைத்த இதன் சங்க செயலாளர் விலை உயர்வை அறிவித்தார்.

அப்போது ஏற்கனவே 4,6,8 இன்ச் கற்கள் 35 ரூபாய் வரை விலையில் இருந்தது.இதன் காரணத்தால் நாளை முதல் அறிவித்த விலை உயரும் என்றும் அதேபோல திருப்பூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து ஹாலோ பிளாக் உற்பத்தி நிறுவனங்களும் செயல்படும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story