திருப்பூர் கருவம்பாளையம் தெற்கு தோட்டம் கருப்பராயன் கோயில் 28 ஆம் ஆண்டு பங்குனி தேரோட்டம் விழா!

திருப்பூர் கருவம்பாளையம் தெற்கு தோட்டம் கருப்பராயன் கோயில் 28 ஆம் ஆண்டு பங்குனி தேரோட்ட விழா நடைபெற்றது.
திருப்பூர் கருவம்பாளையம் தெற்கு தோட்டம் கருப்பராயன் கோயில் 28 ஆம் ஆண்டு பங்குனி தேரோட்டம் விழா. ஸ்ரீ அருள்மிகு செல்வகணபதி ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ கருப்பராயன் கன்னியாத்தால் கோயில் நிகழும் மங்களகரமான கோப கிருதி வருடம் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது அவற்றை முன்னிட்டு அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் இருந்து புனித நீர் எடுத்து வந்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது இவ் பூஜையில் அனைத்து தொழில்களும் நலன் கருதி பொதுமக்கள் அனைவரும் கருத்தருள வேண்டியும் செல்வ செழிப்பு பெற்று நலமுடன் வாழவும் பொங்கல் விழா உற்சவத்துடன் நிறைவு பெற்றது. திருப்பூர் தெற்கு தோட்டம் கருவம்பாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கருப்புராயன் கன்னிமார் கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் பொங்கல் விழாவை தொடர்ந்து 3நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்த விழாவின்போது திருப்பூரில் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தீச்சட்டி,, ஆயிரங்கண் பானை, முடி காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு, கோழிகளை பலியிட்டுச் செல்வதை வழக்கமாகக்கொண்டுள்ளனர்.இந்தாண்டிற்க்கான திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் திருப்பூரில் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி கடவுளை வழிபட்டு சென்றனர்.மறுநாள் இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நேற்று தீர்த்தவாரி உற்சவத்துடன் இந்தாண்டிற்கான பங்குனி பொங்கல் விழா நிறைவு பெற்றது.இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்ததை தொடர்ந்து கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததினால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கடவுளை வழிபட்டு சென்றனர்.விழாவை ஒட்டி பொது மக்களுக்காக அன்னதானம் வழங்கி விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டிகள் மற்றும் கோயில் பூசாரி பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Next Story