திருப்பூர் எல்ஆர்ஜி மகளிர் அரசுகலைஅறிவியல் கல்லூரியில் பட்டமளிப்புவிழா

திருப்பூர் எல்ஆர்ஜி மகளிர் அரசுகலைஅறிவியல் கல்லூரியில் பட்டமளிப்புவிழா நடைபெற்றது.

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல் ஆர் ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரி 17 துறைகளுடன் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பயின்ற மாணவ மாணவியர்களுக்கு பட்டமளிக்கும் விழாவானது இன்று நடைபெற்றது.

33வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கான சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பள்ளி மற்றும் கல்லூரி பருவம் தான் எப்போதும் நம் வாழ்வில் அதிக மகிழ்ச்சியை தரக்கூடியது எனவும் , மகிழ்ச்சியான நினைவுகளை எடுத்துச் செல்லுங்கள் என பேசினார்.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிடைத்த நம்பகத்தன்மையான நட்பை நேசித்து நாம் எந்த உயரத்திற்கு சென்றாலும் அதனை நினைவில் கொள்ள வேண்டும் எனவும், நாம் கல்வி பயின்று பட்டம் பெரும்போதும் ,

வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் போதும் நம்மை விட நம் பெற்றோர்களே அதிக பெருமையை அடைவதாகவும் , அவர்களை நாம் என்றும் மறவாமல் வயது முதிர்ந்த பெற்றோர்களை அரவணைத்து போற்ற வேண்டும் என பேசினார். இதனைத் தொடர்ந்து மாணவிகளுக்கு கல்வி சான்றிதழை வழங்கினார்.

Tags

Next Story