திருப்பூர் மாநகராட்சி நில அளவையர் அதிகாரிகள் இடத்தை அளவீடு செய்ததால் பரபரப்பு.
சென்னை உயர்நீதர மன்ற உத்தரவின்படி திருப்பூரில் திமுக தொழிற்சங்கம் அமைந்துள்ள இடத்தை திருப்பூர் மாநகராட்சி நில அளவை அதிகாரிகள் இடத்தை அளவீடு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி திருப்பூரில் திமுக தொழிற்சங்கம் அமைந்துள்ள இடத்தை திருப்பூர் மாநகராட்சி நில அளவையர் அதிகாரிகள் இடத்தை அளவீடு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் கே பி என் காலனி பகுதியை சேர்ந்த வக்கீல் சுகுணா தேவி இவருக்கு திருப்பூர் குமரன் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் இணையும் இடத்தில் ஒரு சென்ட் இடமிருந்து வருகிறது. இதன் அருகிலேயே திமுக தொழிற்சங்க அலுவலகமானது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக தொழிற்சங்கத்தினர் பெண் வழக்கறிஞர் சுகுணா தேவிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததோடு கடைகள் அமைத்து வாடகைக்கு விட்டு வருவதாக கூறப்படுகிறது இதனால் பாதிக்கப்பட்ட சுகுணா தேவி இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள திமுகவினரிடம் இருந்து இடத்தை மீட்டுத் தர வலியுறுத்தி கடந்த 2003 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்து உள்ளார். வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., கடந்த ஆண்டு ( 19.12.2023 ) சென்னை உயர்நீதிமன்றமானது இடத்தை அளவீடு செய்து 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து திருப்பூர் மாநகராட்சியின் நில அளவையர் அதிகாரிகள் குமரன் சாலை., மேம்பாலம் அருகே திமுக தொழிற்சங்கம் அமைந்துள்ள இடத்தினை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கடந்த ஜனவரி மாதம் 4 - ந் தேதி திமுக தொழிற்சங்கம் அமைந்துள்ள கட்டிடத்தை அகற்ற திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமாருக்கு அறிக்கை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story