திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல்

திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 13 பேர் போட்டி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 13 பேர் போட்டியிடுகிறார்கள். இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திருப்பூர் வடக்கு, தெற்கு, பவானி, அந்தியூர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் நாள் மற்றும் 2-வது நாளில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில், கடந்த 22-ந் தேதி 4 சுயேட்சை வேட்பாளர்கள் மனு கொடுத்தனர். இதன் பின்னர் கடந்த 25-ம் தேதி திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுப்பராயன், அதிமுக சார்பில் அருணாச்சலம், பா ஜனதா சார்பில் ஏ.பி.முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமி உள்ளிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மனு தாக்கல் செய்தனர்.

இது போல் ஒட்டு மொத்தமாக திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 38 பேர் 46 மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனு மீதான பரிசீலனை நடந்தது. இதில் 16 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. 22 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் வேட்பாளர் மனுக்களை திரும்ப பெற நேற்று மாலை வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. அபிநயா, சந்திரசேகர், சுரேஷ் ஆகிய 3 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதன் பின்னர் மாலை கலெக்டர் அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சின்னம் ஒதுக்கீடு நடைபெற்றது. இதில் ஒரே சின்னங்களை கேட்டவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அ.தி.மு.க.வை சேர்ந்த அருணாச்சலம் இரட்டை இலை சின்னம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் தானியக்கதிர் அரிவாள், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பழனி யானை சின்னம், பா.ஜனதாவை சேர்ந்த ஏ.பி. முருகானந்தம் தாமரை சின்னம், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீதா லட்சுமி ஒலிவாங்கி சின்னம், ராஷ்டிரிய சமாஜ் பக்ஷா கட்சியை சேர்ந்த மலர்விழி தொலைக்காட்சி பெட்டி சின்னம், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியை சேர்ந்த ஜனார்த்தனம் வைரம் சின்னம், சுயேச்சை வேட்பாளர்கள் கண்ணன் தென்னந்தோப்பு சின்னம், கார்த்திகேயன் ட்ரக் சின்னம், சதீஷ்குமார் தலைக்கவசம் சின்னம், சுப்பிரமணி வாயு சிலிண்டர் சின்னம், செங்குட்டுவன் ஆட்டோ ரிக்ஷா சின்னம், வேலுச்சாமி கரும்பு விவசாயி சின்னம் ஆகிய சின்னங்களில் போட்டியிடுகிறார்கள். இதில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், தேர்தல் பொது பார்வையாளர் ஹிமான்சு குப்தா, செலவின பார்வையாளர் அசோக்குமார் மற்றும் திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story