பருவமழையை எதிர்கொள்ள தயாராகும் திருப்பூர்

பருவமழையை எதிர்கொள்ள தயாராகும் திருப்பூர்

பைல் படம்

திருப்பூரில் இன்று முதல் 3ஆம் தேதி வரை மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை நேற்றைய தினம் தொடங்கியது. ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 2 நாட்கள் முன்னதாகவே தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்தது. இதன் காரணமாக கேரளா மற்றும் கேரளாவை ஒட்டிய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளைய மறுதினம் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மற்றும் கோவை மாவட்டத்தில் மழை பெய்யும் போது கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு வழியாக கரூரில் நிறைவடையும் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக திருப்பூரில் ஓடும் நொய்யல் ஆற்றிலும் அதிக அளவில் தண்ணீர் செல்லும். அதன் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நொய்யல் ஆற்றின் தூர்வாரும் பணி கடந்த வாரம் தொடங்கியது.

இதனை தொடர்ந்து மாநகரின் வழியே செல்லும் நொய்யல் ஆற்றில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பூர் வளம் பாலம் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் தூர்வாரம் பணியை தொடர்ந்து ஜம்முனை ஓடை , சங்கிலி பள்ளம் உள்ளிட்ட பகுதிகளிலும் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தூர்வாரப்பட்ட நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் தங்குதடையில்லாமல் செல்லும் பட்சத்தில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.

Tags

Next Story