திருப்பூர் : நாளை பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம்
ஆட்சியர் கிறிஸ்துராஜ்
திருப்பூர் மாவட்டத்தில், சிறப்பு குறை தீர்க்கும் முகாம் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து வட்டங்களிலும் நடைபெறவுள்ளது. இந்த குறைதீர்ப்பு முகாம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப் பொருள் தனி தாசில்தார் கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணவுள்ளனர்.
கூட்டம் நடைபெற உள்ள இடங்கள், அவிநாசி வட்டம் பெருமாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,தாராபுரம் வட்டம் கொளத்துப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், காங்கயம் வட்டம் கீரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மடத்துக்குளம் வட்டம் சங்கரமாநல்லூர் 1758 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பல்லடம் வட்டம் மந்திரிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருப்பூர் வடக்கு வட்டம் செட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருப்பூர் தெற்கு வட்டம் மாணிக்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், உடுமலை வட்டம் ராகல்பாவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் ஊத்துக்குளி வட்டம் நடுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஆகியவற்றில் நடைபெறுகிறது.
முகாமில் பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் போன்ற மின்னணு குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்...