திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் சமுதாய நலக்கூடங்கள் அமைத்து தரக்கோரி சட்டசபையில் கோரிக்கை!
சட்டசபையில் கோரிக்கை
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் சமுதாய நலக்கூடங்கள் அமைத்து தரக்கோரி சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் சமுதாய நலக்கூடங்கள் அமைத்து தரக்கோரி சட்டசபையில் கோரிக்கை வைத்தார். பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பகுதிகளில் சமுதாய நலக்கூடங்கள் தேவை என்ற கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி, இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், இதுவரை இல்லாத வகையில் 120 சமுதாய நலக் கூடங்கள் ரூ.100 கோடியில் கட்டித் தரப்படும் என்று நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அறிவித்துள்ளார். எம்.எல்.ஏ. கோரியபடி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய கொங்கு மண்டல பகுதிகளில், ஆதிதிராவிடர் மக்கள் அதிக அளவில் வசிப்பதால் தேவையான இடங்களை கண்டறிந்து, சமுதாய நலக்கூடங்கள் அமைத்துத் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் முந்தைய ஆண்டுகளில் ரூ.100 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வந்தது. முன்பிருந்த திட்டத்திற்கு பதிலாக, ‘அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம்’ என்ற புதிய திட்டத்தை உருவாக்கி, ரூ.100 கோடியை இரண்டு மடங்காக ரூ. 200 கோடியாக உயர்த்தி 2023-24-ம் நிதியாண்டில் 786 ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் சுமார் 1,400 அடிப்படை பணிகள் செய்யப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை தேவையின் அடிப்படையில் இந்த திட்டத்தின் மூலம் செய்து கொடுக்கப்படும். இந்த நிதியாண்டில் புதிய முன்னேடுப்பாக, பழங்குடியினர் வாழ்விடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், ‘தொல்குடி’ என்ற புதிய திட்டம் அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story