தங்கப்பதக்கம் வென்ற திருப்பூர் மாணவனுக்கு உற்சாக வரவேற்பு!

தேசிய அளவில் ஜூனியர் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் என்ற திருப்பூர் மாணவனுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய அளவில் ஜூனியர் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற திருப்பூர் மாணவனுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 2024 வெஸ்ட் பெங்காலில் உள்ள சிலிகுறியில் கடந்த ஜூன் 10ம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது . இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 750 வீரர்களும், தமிழகத்தில் இருந்து 45 வீரர்களும் தேர்வாகி போட்டிக்கு சென்றனர். இதில் 94 கிலோ பிரிவில் திருப்பூரை சேர்ந்த S. ஆகர்சன் தங்கப்பதக்கம் வென்று உள்ளார்.

வெற்றி பெற்ற மாணவருக்கு பயிற்சியாளர் ஸ்ரீதர், திருப்பூர் மாவட்டம் அமைச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேசன் சார்பாக பொதுச் செயலாளர் அண்ணாமலை, பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வெற்றி பெற்ற ஆகர்சன் திருப்பூர் ரயில் நிலையத்தில் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி கௌரவித்தனர். மேலும் கடந்த மூன்று வருடங்களாக மிகுந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் பயிற்சிக்கு உதவிய பயிற்சியாளர் மற்றும் போட்டிக்கு ஸ்பான்சர் செய்த அனைவருக்கும் நன்றியினை மாணவர் தெரிவித்தார். கடந்த முறை ராஞ்சியில் நடந்த தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பிலும் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story