திருப்பூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருப்பூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவ ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது இதற்கான பணிகள் அந்தந்த வாக்கு என்னும் மையங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதன்படி திருப்பூர் மக்களவைத் தொகுதி திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பவானி, பெருந்துறை, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் என ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.

இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் இருந்து வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூர் எல் ஆர் ஜி அரசு பெண்கள் மகளிர் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது நான்காம் தேதி அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணும் அறையில் தேவையான ஏற்பாடுகள் வேட்பாளர் முகவர்கள் அமர தேவையான இடம் தடுப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இது தொடர்பான பணிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story